இவர்கள் கரும்புச்சாறு குடிக்க கூடாதா
கரும்புச்சாறு ஒரு சுவையான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் பானமாகும் இது பல கோடை காலத்தில் பிரபலமாக காணப்படும்.
ஒரு சுவையான பானம் தவிர, இது பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. கரும்புச் சாற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.
இது உடலின் செல்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.அத்துடன் இதில் விரைவான ஆற்றலை வழங்கும் இயற்கை சர்க்கரைகள் இருப்பதால் இது ஒரு சிறந்த ஆற்றல் மூலமாகும்.

இதுமட்டுமின்றி கரும்புச் சாற்றில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களான இரும்பு, கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை நிறைந்துள்ளன அவை நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க அவசியமானவை.
இந்த ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் எலும்பு வலிமையை மேம்படுத்தவும், ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கவும் உதவுகின்றன.
இந்த நிலையில் கரும்புச்சாறு ஆரோக்கியமான பானமாக இருந்தாலும் சிலர் இந்த ஜூஸை குடிக்கவே கூடாது. ஏனெனில் அது அவர்களின் உடல்நலத்தை பாதிக்கலாம்.

நீரிழிவு நோய்
கரும்புச்சாற்றில் இயற்கையான சர்க்கரை அதிகமாக இருப்பதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிக்கும்.
அதனால்தான் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரும்புச்சாறு தீங்கு விளைவிக்கும் என்பார்கள்.

சிறுநீரக பிரச்சினைகள்
கரும்பு சாற்றில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது, இது சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களுக்கு ஆபத்தானது.

கல்லீரல் நோய்
கரும்புச்சாறு குடிப்பது கல்லீரலில் அழுத்தத்தை ஏற்படுத்தும் இது கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

தலைவலி
தலைவலி பிரச்சனையுடன் போராடுபவர்கள், கரும்பு சாறு குடித்தால் மேலும் பிரச்சனையை தூண்டும். உங்களுக்கு அடிக்கடி தலைவலி பிரச்சனை இருந்தால், கரும்பு சாறு குடிப்பதை தவிர்க்கவும்.
இதனால் தலைசுற்றல், தலைவலி போன்ற பல பிரச்சனைகள் வரலாம்.

குளிர் காய்ச்சல்
சளி, காய்ச்சல் வந்தால் கரும்புச்சாறு அருந்தக் கூடாது. இது தவிர கரும்புச்சாறு புண், இருமல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.