மதுபானசாலைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் ; சாணக்கியன் சுட்டிக்காட்டு
ஜனாதிபதியால் தேர்தல் மேடைகளில் குறிப்பிடப்பட்ட அரசியல் ரீதியாக வழங்கப்பட்ட மதுபானசாலைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை பெரியநிலாவணையில் உள்ள மதுபானசாலை உரிமங்களை இடைநிறுத்தல் தொடர்பான ஒத்திவைப்புவேளை பிரேரணையை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சட்டவிரோத மதுபானசாலைகள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கம் அண்மையில் வெளியிட்ட மதுபானசாலை உரிமையாளர்கள் விபரம் தொடர்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வேண்டும்.
அது தொடர்பில் யார் விசாரணைகளை மேற்கொள்கிறார்கள் என்பது தொடர்பிலான விபரங்களை வெளியிட வேண்டும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கோரியுள்ளார்.