மாதுளையை இவர்கள் மறந்தும் கூட சாப்பிடக்கூடாதாம்!
பொதுவாகவே பழங்களை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. அதிலும் மாதுளை உடலுக்கு மிகவும் நன்மை அள்ளித்தரும் தரும் என பரிந்துரைக்கப்படுகின்றது.
மாதுளை சாப்பிடுவதால் உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிப்பதுடன், ஆரோக்கியம் அளிப்பதுடன் , சருமத்திற்கும் புத்துணர்ச்சி தருகிறது. மாதுளையில் பல வகையான சத்துக்கள் காணப்படுகின்றதனால் மிகவும் நன்மையளிப்பதாக கருதப்படுகின்றது.
ஆனால் மாதுளை சிலருக்கு தீங்கு விளைவிக்கும் என கூறப்படுகின்றது. அதன்படி யார் யாரெல்லாம் மாதுளை பழத்தை சாப்பிட கூடாது என பார்க்கலாம்.
அமிலத்தன்மை
இந்த பிரச்சனையால் சிரமப்படுபவர்கள் மாதுளை பழத்தை சாப்பிடக்கூடாது. மாதுளையின் குளிர்ச்சியான தாக்கத்தால், உணவு சரியாக ஜீரணமாகாது.
குறைந்த இரத்த அழுத்தம்
உங்களுக்கு குறைந்த இரத்த அழுத்தம் பிரச்சனை இருந்தால், மாதுளை உட்கொள்வது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
இருமல்
உங்களுக்கு இருமல் பிரச்சனை இருந்தால், மாதுளை சாப்பிட வேண்டாம். இதனால் தொற்றுநோய் அதிகரிக்கலாம். எனவே, இருமல் பிரச்சனை இருந்தால், மாதுளை சாப்பிடாமல் இருப்பது நல்லது.
தோல் பிரச்சனைகள்
சருமத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், மாதுளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், மாதுளையை உட்கொள்வதால் உங்கள் சருமத்தில் சிவப்பு தடிப்புகள் ஏற்படலாம் எனவும் கூறப்படுகின்றது.