கொழும்பு தேசிய வைத்தியசாலை ஊழியர் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு! பரபரப்பு சம்பவம்
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஊழியர் ஒருவரின் வீடொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை (05-10-2023) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து எவருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கந்தானை, பொல்பிதிமுகலான பகுதியில் உள்ள வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூட்டுக்கு ரிவோல்வர் துப்பாக்கியை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகத்தை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.