அரிசிக்கான தட்டுப்பாடு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்!
5 இலட்சம் ஹெக்டேயருக்கும் அதிகளவில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இந்த வருட இறுதி வரையில் அரிசிக்கான தட்டுப்பாடு இலங்கையில் ஏற்படாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (24-08-2022) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது, தொடர்ந்து உரையாற்றிய அவர்,
[XVN ]
நெற் பயிர்ச் செய்கையை விரிவுப்படுத்தி அடுத்த வருடத்தில் அரிசி இறக்குமதியை நிறுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் எனவும் உணவு, பணவீக்கப் பட்டியலில் இலங்கைக்கு 5ஆவது இடம் கிடைத்துள்ளமை கவலையளிப்பதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.