நாட்டில் நிலவும் கடுமையான மருந்து தட்டுபாட்டு ; எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை

Cancer Sajith Premadasa Sri Lankan Peoples National Health Service Blood Pressure
By Sahana Jun 14, 2025 04:45 PM GMT
Report

இலவச சுகாதாரம் என்பது மக்களினது மனித உரிமையாகும். இலவச சுகாதார கட்டமைப்பினுள் வினைதிறனான சேவைகளைப் பெறுவது நாட்டு மக்களுக்கு அடிப்படை உரிமையாக அமைந்து காணப்பட்டாலும், இத்தருணத்தில் நமது நாட்டின் சுகாதார கட்டமைப்பில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அஸ்வெசும பணத்தை மோசடி செய்த பிரதேச செயலக அதிகாரி விளக்கமறியலில்

அஸ்வெசும பணத்தை மோசடி செய்த பிரதேச செயலக அதிகாரி விளக்கமறியலில்

அறுவை சிகிச்சை உபகரணங்கள் உள்ளிட்ட மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதே இதற்குக் காரணமாகும்.

நாட்டில் நிலவும் கடுமையான மருந்து தட்டுபாட்டு ; எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை | Shortage Country Opposition Leader S Request Gove

புற்றுநோய் நோயாளிகள், இதய நோயாளிகள், உயர் இரத்த அழுத்த நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்தும் மருந்துகளுக்கும், வலி ​​நிவாரணிகள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கும் கடுமையான தட்டுபாடு நிலவுகின்றன.

கிடைக்கும் தகவல்களின் பிரகாரம் 180 க்கும் மேற்பட்ட மருந்துகளுக்கு இவ்வாறு தட்டுப்பாடு காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வைத்தியசாலை கட்டமைப்பில் நிலவும் மருந்து தட்டுபாட்டுப் பிரச்சினைய பாராளுமன்றத்தில் நான் முன்வைத்தேன். இலவச சுகாதாரப் பராமரிப்பின் கீழ் அரச வைத்தியசாலைகளுக்குச் சென்றாலும் நோயாளர்களுக்கு மருந்துகள் இன்று கிடைப்பதில்லை.

தனியார் வைத்திய நிறுவனங்கள் மூலம் அதிக விலைக்கு மருந்துகளைப் பெற வேண்டிய நிலைக்கு மக்கள் இன்று தள்ளப்பட்டுள்ளனர். இதனை இலவச சுகாதார சேவையாக கருத முடியாது. மாறாக கட்டணம் செலுத்தும் சுகாதார சேவையாகவே காணப்படுகின்றன.

நாட்டில் நிலவும் கடுமையான மருந்து தட்டுபாட்டு ; எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை | Shortage Country Opposition Leader S Request Gove

நமது நாட்டின் நலன்புரி பொருளாதாரம் மற்றும் நலன்புரி அரசில் இலவச சுகாதார சேவைகளை திறம்பட செயல்படுத்த அமைச்சர், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஒட்டுமொத்த அரசாங்கமும் முழு மூச்சோடு பாடுபட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் கடுமையான மருந்து தட்டுபாட்டு விவகாரம் குறித்து இன்று (14) விசேட கருத்தை வெளியிடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

மருந்து தட்டுப்பாட்டுக்கு ஒரு தீர்வை வழங்காமல், மக்களின் இந்த அடிப்படை உரிமையையும் மனித உரிமையையும் அரசாங்கம் மீறி வருகின்றது.

அரசாங்கம் எந்த தீர்வையும் வழங்காத ஒரு கொள்கையையே பின்பற்றி வருகிறது. இது குறித்து பாராளுமன்றத்தில் வினவப்பட்டாலும், அரசாங்க தரப்பில் இருந்து இதற்கு எந்த தீர்வுகளும் வழங்கப்படவில்லை.

காணாமல்போன இளம் வங்கி அதிகாரி சடலமாக மீட்பு; பொலிஸார் தீவிர விசாரணை

காணாமல்போன இளம் வங்கி அதிகாரி சடலமாக மீட்பு; பொலிஸார் தீவிர விசாரணை

மக்களின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ள இந்நேரத்தில், நாட்டு மக்களை உயிருடன் வைத்திருக்கத் தேவையான மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்.

பல ஆண்டுகளாக நடைமுறையில் காணப்படும் விலைமனு செயல்முறையை மட்டும் சுட்டிக்காட்டாமல், இந்த மருந்துப் பிரச்சினைக்கு அவசரத் தீர்வை அரசாங்கம் முன்வைக்க வேண்டும்.

மக்களின் உயிர்வாழ்வை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாக அமைந்து காணப்படுவதனால், மனித உயிர்களைக் கருத்தில் கொண்டு இந்த கடுமையான பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் இங்கு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

இ.போ.ச, தனியார் பேருந்து ஊழியர்கள் மோதலில் பயணி மருத்துவமனையில்

இ.போ.ச, தனியார் பேருந்து ஊழியர்கள் மோதலில் பயணி மருத்துவமனையில்

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US