கடற்கரையில் நடந்த கொலை ; பொலிஸார் சந்தேகம்
குருநாகல் - உஸ்வெட்டகேயிய – மோர்கன்வத்த கடற்கரையில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் இறந்து கிடந்தவர் அயோசாந்த போபயாரச்சி (40) என்றும், அவர் கடவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நபர் போதைப்பொருள் வலைப்பின்னலில் செயல்படுபவர் என்றும், மூன்று மாதங்களுக்கு முன்பு துபாயில் இருந்து நாட்டிற்கு வந்தவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொலிஸாருக்கு தகவல்கள் கொடுத்திருக்கலாம் என சந்தேகம்
அத்துடன் உயிரிழந்த நபர் ஐஸ் போதைப்பொருளுக்கு கடுமையாக அடிமையானவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கந்தானை பகுதியில் அவர் கொண்டு சென்ற ஒரு கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து, அந்த நபர் விடுவிக்கப்பட்டார், போதைப்பொருள் மற்றும் அதை எடுத்துச் சென்ற நபர் மட்டுமே கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பொலிஸாருக்கு தகவல்கள் கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் துபாயில் உள்ள பாதாள உலக பிரமுகரான துபாய் களன என்பவரால் இந்த கொலை நடத்தப்பட்டதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இந்த கொலைக்கு பின்னால் போதைப்பொருள் கடத்தல் உள்ளது என்றும், இந்த நபர் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் இந்த சம்பவம் அருகிலுள்ள CCTV கேமராவில் பதிவாகியுள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.