உணவகம் முன்பு துப்பாக்கிச்சூடு
உணவகம் ஒன்றின் முன்பாக துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தெவிநுவர, சிம்ஹாசன வீதியில் அமைந்துள்ள உணவகத்தில் நேற்று (28) இரவு 8.45 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றதாக கந்தர பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் பிரகாரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவ்விடத்திற்குச் சென்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ஹோட்டலுக்கு முன்பாக T-56 தோட்டாக்கள் 3 மற்றும் வெற்று தோட்டா உறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன் கந்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.