அஹுங்கல்லவில் துப்பாக்கிச்சூடு ; மர்ம நபர்களின் தாக்குதலால் பரபரப்பு
அஹுங்கல்ல காவல்துறை எல்லைக்குட்பட்ட கல்வெஹெர பகுதியில், இன்று (04) அதிகாலை வீட்டினுள் இருந்த நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த நபர் உடனடியாக பலபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர் அஹுங்கல்ல, கல்வெஹெர பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபராவார்.
வீட்டின் ஜன்னல் வழியாக இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்திற்குப் கைத்துப்பாக்கி (Pistol) ரக ஆயுதம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக அஹுங்கல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.