இலங்கை சனத்தொகை குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

Sri Lanka Women
By Sahana Apr 10, 2026 09:26 PM GMT
Report

இலங்கையில் ஆண்களை விடவும் பெண்களே அதிகம் தங்களுடைய துணைகளை இழந்தவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு ஆசை காட்டி யுவதி ஒருவருக்கு பெண் செய்த மோசமான செயல்

வெளிநாட்டு ஆசை காட்டி யுவதி ஒருவருக்கு பெண் செய்த மோசமான செயல்

இலங்கையின் ஒட்டுமொத்த சனத்தொகைப் போக்கை அவதானிக்கும்போது, ஆண்களை விடப் பெண்களே அதிகளவில் கணவனை இழந்தவர்களாக உள்ளனர்.

தேசிய ரீதியாகப் பார்க்கையில், பெண்களில் சராசரியாக 9.4 சதவீதம் பேர் இவ்வாறு தங்களின் துணைகளை இழந்து உள்ளனர்.

இலங்கை சனத்தொகை குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்கள் | Shocking Released About Sri Lanka S Population

ஆனால், மனைவியை இழந்த ஆண்களின் விகிதம் வெறும் 1.7 சதவீதமாக மட்டுமே உள்ளது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் 2024 சனத்தொகை கணக்கெடுப்பின்படி, இலங்கையில் துணையை இழந்தவர்கள் குறித்த முக்கியத் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இன ரீதியான அடிப்படையில் ஆராயும்போது, பறங்கியர் சமூகத்திலேயே அதிகப்படியான பெண்கள் கணவனை இழந்துள்ளனர்

இச்சமூகத்தில் 10.7 சதவீத பெண்கள் தங்களது துணைகளை இழந்தவர்களாகப் பதிவாகியுள்ளனர்.

இதற்கு மிக நெருக்கமாக, இந்தியத் தமிழர் அல்லது மலையகத் தமிழர் சமூகத்தில் 10.5 சதவீத பெண்கள் கணவனை இழந்துள்ளனர்.

இந்த இரண்டு சமூகங்களிலும் பத்தில் ஒரு பெண் துணையை இழந்திருப்பது சமூக ரீதியாகக் கவனிப்புக்குரிய ஒன்றாகும்.

ஏனைய முக்கிய இனக்குழுக்களான சிங்களவர் மற்றும் இலங்கைத் தமிழர் ஆகிய இரு தரப்பிலும் கணவனை இழந்தவர்களின் விகிதம் சமமாக, அதாவது தலா 9.6 சதவீதமாகக் காணப்படுகிறது. இது தேசிய சராசரிக்கு மிக நெருக்கமான ஒரு நிலையாகும்.

நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு ; எம்பியை வெளியேற்றுவதாக சபாநாயகர் எச்சரிக்கை

நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு ; எம்பியை வெளியேற்றுவதாக சபாநாயகர் எச்சரிக்கை

இதற்கு அடுத்ததாக, மலாய் சமூகத்தில் 10 சதவீத பெண்கள் கணவனை இழந்தவர்களாக உள்ளனர். அனைத்து இனக்குழுக்களையும் ஒப்பிடுகையில், இலங்கைச் சோனகர் (முஸ்லிம்) சமூகத்திலேயே மிகக் குறைந்த அளவிலான கணவனை இழந்த பெண்கள் பதிவாகியுள்ளனர்.

இச்சமூகத்தில் 7.1 சதவீத பெண்கள் மட்டுமே தங்களது துணையை இழந்துள்ளனர். மொத்தத்தில், இலங்கையின் அனைத்து இனக்குழுக்களிலும் மனைவியை இழந்த ஆண்களை விடக் கணவனை இழந்த பெண்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகவே உள்ளது.

குறிப்பாக இந்தியத் தமிழர் மற்றும் பறங்கியர் சமூகங்களில் இந்தத் தரவுகள் மிக உயர்வாகக் காணப்படுவதால், அந்தச் சமூகங்களில் உள்ள பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு குறித்த மேலதிக அவதானிப்புத் தேவைப்படுவதை இந்தப் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

மத்திய கிழக்கு நிலைமை தீவிரம் ; மொஜ்தபா காமேனியின் இராணுவ முடிவுகளால் கதி கலங்கும் இஸ்ரேல்

மத்திய கிழக்கு நிலைமை தீவிரம் ; மொஜ்தபா காமேனியின் இராணுவ முடிவுகளால் கதி கலங்கும் இஸ்ரேல்

5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US