இலங்கையின் பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
இலங்கையில் பாடசாலை மாணவர்களில், மேல் மாகாணத்தில் உள்ள மாணவர்களே அதிகளவில் போதைப்பொருட்களுக்கு, அடிமையாகும் போக்கைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை இதனைக் குறிப்பிட்டுள்ளது.
சக நண்பர்களின் தூண்டுதல்
இதில் கொழும்பு மாவட்டம் முதன்மை நிலையில் உள்ளதாக அந்த சபை சுட்டிக்காட்டியுள்ளது. இதன்படி கிரேண்ட்பாஸ், தொட்டலங்க, கொம்பனித் தெரு, அங்குலானை, வாழைத்தோட்டம், பாணந்துறை, தெஹிவளை, கல்கிஸ்ஸ, ஹிக்கடுவ உள்ளிட்ட பல இடங்களில் குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகக்கூடியவர்கள் என தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் கண்டி மாவட்டத்தின் சில பகுதிகள், பாடசாலை மாணவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகக்கூடிய அதிக வாய்ப்புள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கம்பஹா, குருநாகல், அனுராதபுரம், காலி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களும் ஆபத்தான மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.
சக நண்பர்களின் தூண்டுதல் பாடசாலை மாணவர்களின் போதைப்பொருள் பாவனையில் செல்வாக்கு செலுத்தும் முக்கிய காரணியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.