திருமண மேடையில் அதிர்ச்சி ; மணப்பெண் செய்த அதிரடி காரியம்
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் திருமண வைபவத்தின் போது மணப்பெண் செய்த எதிர்பாராத செயலால் திருமணமே பாதியில் நின்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற குறித்த திருமண விழாவில், மணமக்களுக்கு இடையே மாலை மாற்றும் வைபவம் மிக விமரிசையாகத் திட்டமிடப்பட்டிருந்தது.
உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ மணமக்கள் மேடையில் நின்றுகொண்டிருந்த போது, மணப்பெண் யாரும் எதிர்பார்க்காத ஒரு காரியத்தைச் செய்துள்ளார்.

மணமகனின் கழுத்தில் மாலையைப் போட வேண்டிய மணப்பெண், திடீரென மேடையிலிருந்து கீழே எகிறிக் குதித்து அங்கு நின்றுகொண்டிருந்த தனது காதலனின் கழுத்தில் மின்னல் வேகத்தில் மாலையைப் போட்டு தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
மணப்பெண்ணின் இந்தத் செயலால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த மணமகன், உடனடியாகத் திருமணத்தை நிறுத்திவிட்டு மேடையிலிருந்து பாதியிலேயே வெளியேறியுள்ளார்.
இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த மணமகனின் உறவினர்கள் மற்றும் அங்கு திரண்டிருந்தவர்கள், மேடைக்குக் கீழே நின்றுகொண்டிருந்த காதலனைச் சரமாரியாகத் தாக்கியதால் பெரும் குழப்பமான சூழல் நிலவியுள்ளது.