எண்ணெய் சந்தையில் சில நிமிடங்களில் நடந்த மர்மம் ; பின்னணியில் உள்ள அதிர்ச்சித் தகவல்கள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதலைத் தள்ளிவைப்பதாக அறிவிப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னதாக, எண்ணெய் வர்த்தகத்தில் பல நூறு மில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக பிபிசி நடத்திய தரவு ஆய்வில் தெரியவந்துள்ளது.
ட்ரம்ப்பின் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்குச் சுமார் 15 நிமிடங்களுக்கு முன்னர், சந்தையில் வர்த்தக அளவு எதிர்பாராத விதமாக அதிகரித்துள்ளது.

அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை 14% வரை சரிந்தது.
இந்த விலை மாற்றத்தை முன்கூட்டியே கணித்து முதலீடு செய்தவர்கள் இதன் மூலம் பெரும் இலாபம் ஈட்டியுள்ளனர்.
இந்த வழக்கத்திற்கு மாறான வர்த்தக நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள சந்தை ஆய்வாளர்கள், ஜனாதிபதியின் இந்த முக்கிய முடிவு குறித்த தகவல் முன்கூட்டியே சில வர்த்தகர்களுக்குக் கசிந்திருக்கலாமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.
இது குறித்து காவல்துறை அல்லது சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை அமைப்புகள் விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.