சுமார் 50 இலட்சம் இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித்தகவல்!
சுமார் 50 இலட்சம் இலங்கையர்கள் தற்போது ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலியாவின் மெல்பேர்னில் வசிக்கும் நரம்பியல் நிபுணர் பேராசிரியர் திஸ்ஸ விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
24 நாடுகளின் ஒருமித்த கருத்துடன் ஆசிய பிராந்திய சிகையலங்கார சங்கத்தின் ஐந்தாவது தலைவராக நரம்பியல் நிபுணர் பேராசிரியர் திஸ்ஸ விஜேரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையிலேயே பேராசிரியர் திஸ்ஸ விஜேரத்ன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். உலகில் உள்ள சுமார் 5 பில்லியன் மக்களை பலவீனப்படுத்தும் நரம்பியல் நோய்களில் ஒற்றைத் தலைவலியும் ஒன்றாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் , இது மனித இயலாமைகளில் 20 சதவிகிதம் எனவும் கூறியுள்ளார்.
அதேசமயம் , இலங்கையின் மென்பொருள் வடிவமைப்பாளர்கள் குழுவுடன் இணைந்து, பேராசிரியர் திஸ்ஸ விஜேரத்ன நோயின் இருப்பை துல்லியமாக கண்டறியும் விசேட மென்பொருள் ஒன்றினையும் உருவாக்கியுள்ளார்.