தமிழர் பகுதியில் இளைஞனின் மோசமான செயல் ; இரகசியத் தகவலால் அம்பலமான விடயம்
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனைப் பகுதியில் 28,500 மில்லி லீற்றர் கசிப்புடன் 26 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் இச்சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரிதலைமையிலா ன பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் போது, சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கசிப்புடன் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், மீட்கப்பட்ட கசிப்பு உள்ளிட்ட சான்றுப் பொருட்களும் சட்ட நடவடிக்கைகளுக்காகச் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
சந்தேக நபரைச் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.