ரயிலில் தூங்கி எழுந்த இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
கணவருடன் ரயிலில் கொழும்புக்குப் பயணித்த பெண் ஒருவரின் கைப்பையிலிருந்த சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேருவளை, கங்கனாங்கொட பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய பெண் ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். இதனையடுத்து நகைகள், பணம் காணாமல் போயிருந்ததாக பெண் பொலிசில் முறைப்பாடளித்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
சுதந்திர தினத்தன்று தனது கணவருடன் ரயிலில் கொழும்பு நோக்கி பயணித்தபோது தான் உறங்கி விட்டதாகவும், ரயில் கெக்கிராவ ரயில் நிலையத்தை கடந்து சிறிது தூரம் சென்றபோது தான் விழித்துப் பார்த்தபோது தனது நகைகள், பணம் காணாமல் போயிருந்ததாகவும் பெண் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நகைகள் களவாடப்பட்டமை தொடர்பில் கெக்கிராவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.