வவுனியா பிரபல உணவகத்தில் உணவு வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றில் வாங்கிய உணவில் புழுக்கள் காணப்பட்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன் தினம் நண்பகல் வாங்கிய மதிய உணவிலேயே இவ்வாறு புழுக்கள் காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து உணவை வாங்கிய நபர் அது தொடர்பில் கடை முதலாளியிடம் கேட்ட போது இதெல்லாம் சாதாரண விடயம் என்று கூறி , அவர் உணவுக்குரிய பணத்தை திருப்பிகொடுத்ததாக பாதிக்கப்பட்ட நபர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் மக்கள் அதிகமாக கூடும் குறித்த பிரபல உணவகத்தில் இப்படி உண்வில் புழுக்கள் இருந்துள்ளமை தொடர்பில் பலரும் விசனங்களை வெளியிட்டுள்ளனர்.
அதோடு மக்களின் உடல்நலத்தை பற்றி கவலைப்படாமல், உணவில் புழுக்கள் இருந்தமை தொடர்பில் கவலைப்படாது வெகு சர்வ சாதாரணமாக பதில் கூறிய கடை முதலாளி தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

