ஷிரந்தி ராஜபக்ஷ மொட்டுக் கட்சியின் உறுப்பினர் அல்ல ; அறிவித்தது பொதுஜன பெரமுன
ஷிரந்தி ராஜபக்ஷ எமது கட்சியின் உறுப்பினர் அல்ல. எனினும், அவர் எமது கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷவின் மனைவி. அவரை நாம் மதிக்கும் ஒருவராக கருதுகிறோம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அக் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மருத்துவ சிகிச்சை
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
கடந்த மாதம் 24ஆம் திகதி விசாரணைக்காக வருமாறு அவருக்கு அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது. அப்போது அவர் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் நிலையில் இருந்தார்.
இரண்டு வாரங்களில் இலங்கைக்கு திரும்பிய பின்னர் விசாரணைக்கு வருவதற்கான திகதியை வழங்குமாறு அவர் கோரியிருந்தார். நாடு திரும்பிய பின்னரும் பொலிஸாருக்கு இதனை அறிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையில், எந்தவொரு திகதியையும் வழங்காமல், மேலதிக அறிவித்தல் எதுவுமின்றி அதிகாலை நேரத்தில் நுகேகொடையில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்று இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரம் சிரிலிய சவிய சமூக சேவை அமைப்புடன் தொடர்புடையது. அந்த அமைப்பின் வங்கிக் கணக்கு 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் பணத்துடன் முடக்கப்பட்டது.
யாழில் இருந்து சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த துயரம் ; தந்தையும் பச்சிளம் குழந்தையும் பலி ; தாய்க்கு நேர்ந்த கதி
அந்தப் பணம் இன்றும் கணக்கிலேயே இருப்பதாக அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். எனவே, ஷிரந்தி ராஜபக்ஷ கைது செய்யப்பட்டதன் பின்னணியில் அரசியல் தேவை இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். எனினும், சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
குற்றம் செய்திருந்தால் சட்டத்தை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோம். சுதந்திரமானதும் நியாயமானதுமான நீதிமன்ற விசாரணைக்கு எமது கட்சி ஒருபோதும் அஞ்சாது என்றார்.