ஷிரந்தி ராஜபக்சவிற்கு மறுக்கப்பட்ட அனுமதி ; சிறைச்சாலை திணைக்களம் அதிரடி
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவை இன்று கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாது என சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலை மருத்துவரின் பரிந்துரைக்கு அமைய, ஷிரந்தி ராஜபக்ச நாளை (09) தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மருத்துவ பரிசோதனை
மருத்துவ பரிசோதனைகளுக்காகவே அவர் தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவச் சிகிச்சைக்காகச் சந்தேகநபரை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் ஆஜர்படுத்துவதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
நீதிமன்ற உத்தரவின் பேரில் அவருக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலைகள் ஆணையாளர் சேனக்க பல்லேதென்ன குறிப்பிட்டுள்ளார்.