சஹ்ரான் மனைவிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
ஈஸ்டர் தககுத்தளின் பிரதான குற்றவாளியான சஹ்ரான் ஹாசிமின் மனைவிக்கு எதிராக அதிபர் திணைக்களத்தினால் நேற்றைய தினம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி முத்த ஏப்ரல் 26,2019 திகதி ஆகிய இஅடைபட்ட காலப்பகுதியில் சாரா ஜாஸ்மின் என்றழைக்கப்பட்ட புலஸ்தினி மகேந்திரன் என்பவர் வெடிபொருள் தயாரித்தமை மற்றும் அவற்றை சேகரித்து வைத்திருந்த தகவலை அறிந்திருந்தும் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்தது தொடர்பில் சஹ்ரான் மனைவிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் 05 ஆம் பிரிவின் கீழ் பிரதிவாதியான அப்துல் காதர் பாத்திமா ஹாதியா குற்றமிழைத்துள்ளதாக குற்றப்பத்திரத்தினூடாக சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.
பிரதிவாதி கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வழக்கு தொடுநர் சார்பில் நீதிமன்றில் ஆஜராகிய அரச தரப்பு சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி பிரதிவாதியான அப்துல் காதர் பாத்திமா ஹாதியாவை கொழும்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.