ரஜினியிடம் ஆசிர்வாதம் வாங்கிய ஷங்கர் மகள்!
சினிமாவில் நடிகையாக அறிமுகமாவதையொட்டி இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்து ஆசிர்வாதம் வாங்கியுள்ளார். இயக்குநர் ஷங்கருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
அதில், மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடைபெற்றது. இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் எம்பிபிஎஸ் முடித்திருக்கிறார். படித்து முடித்தவுடன் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக முத்தையா இயக்கத்தில் சூர்யா - ஜோதிகா தயாரிப்பில் ‘விருமன்’ படத்தில் அதிதி அறிமுகமாகிறார்.
இதன் காரணமாக படம் குறித்த, எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதனையொட்டி, நேற்று நடிகர் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆசிர்வாதம் வாங்கினார் அதிதி.
அத்துடன் ரஜனியிடம் ஆசீர்வாதம் வாங்கிய விடயத்தை பெருமையுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் அதிதி ஷங்கர்.