14 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்; மௌலவி கைது
Ampara
Sexual harassment
Child Abuse
By Sulokshi
அம்பாறையில் 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், எரகம பகுதியைச் சேர்ந்த மௌலவி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான அவர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றிருந்த நிலையில், பின்னர் சட்டத்தரணி ஒருவரின் ஊடாக அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
இதையடுத்து, அவர் ஜூன் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், பிரதான சந்தேகநபருக்கு உதவியதாகக் கூறப்படும் மற்றொரு 21 வயதுடைய மௌலவியும் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US