பிரபல உயர்கல்வி நிறுவனமொன்றில் பாலியல் துன்புறுத்தல்; கண்ணீர்விடும் மாணவிகள்
தனியார் உயர்கல்வி நிறுவனமொன்றில் 10 மாணவிகளை தொடர்ந்தும் பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் தொடர்பில், குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநாகல் பகுதியிலுள்ள தனியார் உயர்கல்வி நிறுவனமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிறுவனத்தின் உரிமையாளர் கைது
சம்பவம் தொடர்பில் மாணவர்கள் அளித்த முறைப்பாட்டிற்கு அமைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் குருநாகல் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நபருக்கு சொந்தமான உயர்கல்வி நிறுவனத்தில் கல்வி நோக்கங்களுக்காக பதிவு செய்யப்பட்ட மாணவிகள் தொடர்ந்தும் பாலியல் தொல்லைக்கு முகம் கொடுத்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.