பாலியல் தொல்லை; மூன்று நாடாளுமன்ற ஊழியர்கள் பணிநீக்கம்
இலங்கை நாடாளுமன்ற பெண் ஊழியர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று நாடாளுமன்ற ஊழியர்கள் அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
பல கட்ட விசாரணைகளின் பின்னர் இந்த மூன்று ஊழியர்களும் குற்றவாளிகள் என நிரூபணமாகியுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ஒழுக்காற்று விசாரணை
அதன்படி, நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவின் பரிந்துரைகளின் அடிப்படையில், சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன மூன்று ஊழியர்களையும் பணிநீக்கம் செய்ய ஒப்புதல் அளித்திருந்தார்.
ஒழுக்காற்று விசாரணையின் இறுதி அறிக்கை 2024.12.23ஆம் திகதி பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஹானி ரோஹணதீரவிடம் கையளிக்கப்பட்டது.
அத்துடன், இதனை அடிப்படையாகக் கொண்டு சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மூவரும் இடை நீக்கம் செய்யப்பட்ட தினத்திலிருந்து பணி நீக்கம் செய்யுமாறு சபாநாயகரிடம் விடுத்த பரிந்துரைக்கு அமைய பணியாளர்கள் பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.