பொது இடத்தில் உறவுக்கு அழைத்த காதலன்; மறுத்த காதலிக்கு நேர்ந்த கதி!
இந்தியாவின் மும்பையில் கடற்கரையில் உறவுக்கு வர மறுத்த காதலியை , காதலன் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உறவுகொள்ள வற்புறுத்திய காதலன்
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் லுப்னா ஜாவேத் சுக்தே (28). இவர் ஆகாஷ் முகர்ஜி (22) என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இவர்கள் இருவரும் மும்பை, பாந்த்ராவில் உள்ள கடற்கரைக்கு நேற்று முன்தினம் இரவு சென்றனர்.
அன்று ஆகாஷ் முகர்ஜிக்கு பிறந்தநாள். இதனால், கடற்கரையில் அலையின் அழகை பார்த்துக் கொண்டு லுப்னாவிடம் ஆகாஷ் நெருக்கமாக இருந்துள்ளார். எனினும் ஒரு கட்டத்திற்கு மேல் பொது இடத்தில் உறவு வைத்துக் கொள்ள ஆகாஷ் முயன்றபோது அதை லுப்னா மறுத்துள்ளார்.
மீண்டும், மீண்டும் ஆகாஷ் வற்புறுத்த லுப்னா எதிர்ப்பு தெரிவித்ததனால் ஆத்திரமடைந்த ஆகாஷ் லுப்னாவின் தலைமுடியை இழுத்துப் பிடித்து பாறையில் மோதியுள்ளார்.
தர்ம அடிகொடுத்த பொதுமக்கள்
ஆகாஷ் தாக்கியதில் லுப்னாவின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டிய நிலையில், அதனை பொருட்படுத்தாது , லுப்னாவை தரதரவென இழுத்துச் சென்ற ஆகாஷ் கடல் தண்ணீரில் மூழ்கடித்து கொலை முயற்சி செய்துள்ளார்.
இதன்போது வலி தாங்க முடியாமல் லுப்னா அலறி கத்தி கூச்சல் போட்ட நிலையில், பெண்ணின் அலறலை கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் ஆகாஷை வெளுத்து வாங்கியதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆகாஷை கைது செய்த நிலையில், தாக்குதலுக்குள்ளான பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.