தமிழர் பகுதியொன்றில் கைதான காதி நீதிபதி மற்றும் மனைவிக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவிக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலை நீடிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்று நேற்று (25) உத்தரவிட்டது.
இம் மாதம் திங்கட்கிழமை (18) மாலை அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில் கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் அமைந்துள்ள அலுவலகத்தில் வைத்து இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியும் உடந்தையாக செயற்பட்ட அவரது மனைவியும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பின்னர் செவ்வாய்க்கிழமை (19) அன்று கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
திங்கட்கிழமை (25) கொழும்பு பிரதான நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.