கொண்டெக்ட் லென்ஸ்களுக்கு கடும் தட்டுப்பாடு
கொண்டெக்ட் லென்ஸ்களுக்கு எதிர்காலத்தில் கடும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ வழங்கல் பிரிவில் எந்தவிதமான கொண்டெக்ட் லென்ஸ்களும் (Contact Lenses) இல்லாததாலே இந் நிலை ஏற்பட்டதாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நஷ்டம்
இதன்காரணமாக அவற்றுக்கான அவசர கொள்முதலில் ஈடுபடும் பட்சத்தில் மாதமொன்றுக்கு சுமார் 20 கோடி ரூபா வரை அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படும் என சுகாதார சங்கங்கள் தெரிவிக்கின்றன.
நாடளாவிய ரீதியாக உள்ள மருத்துவமனைகளில் சத்திர சிகிச்சைக்காக மாதத்திற்கு 15,000 காண்டாக்ட் லென்ஸ்கள் இருந்தாலும் வைத்தியசாலைகளில் தற்போது மருத்துவ வழங்கல் துறையால் வழங்கப்பட்ட கொண்டெக்ட் லென்ஸ்கள் மற்றும் நன்கொடையாக பெறப்பட்ட கொண்டெக்ட் லென்ஸ்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.