போலி ஆவணங்களுடன் பயன்படுத்தப்பட்ட பல வாகனங்கள் மீட்பு
போலி ஆவணங்களுடன் பயன்படுத்தப்பட்டு வந்த சொகுசு ரக ஜீப் வாகனமொன்று ஹோமாகம – கிரிவத்துடுவ பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.
அந்த பகுதியில் உள்ள வாகன திருத்துமிடத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பின் போது குறித்த வாகனம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
அத்துடன் குறித்த வாகன திருத்துமிடத்தின் உரிமையாளர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, பிபிலியான பகுதியில் போலி ஆவணங்களுடன் பயன்படுத்தப்பட்டு வந்த சொகுசு ரக ப்ராடோ வாகனமொன்று, சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணை பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.
அதேநேரம் பிலியந்தலை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பின் போது போலி ஆவணங்களுடன் பயன்படுத்தப்பட்ட மற்றுமொரு வாகனம், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணை பிரிவின் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த வாகனங்களின் உரிமையாளர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.