சீரற்ற காலநிலையால் பல ரயில்கள் ரத்து
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கும், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கும் பிரதான ரயில் மார்க்கத்தில் இயக்க திட்டமிடப்பட்டிருந்த இரண்டு இரவு தபால் ரயில்கள் உட்பட ஐந்து ரயில் சேவைகள் இன்று (22) ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகள் பின்வருமாறு,
பிற்பகல் 03.35 மணிக்கு - கொழும்பு கோட்டை முதல் கண்டி வரை
இரவு 08.30 மணிக்கு - கொழும்பு கோட்டை முதல் பதுளை வரை (இரவு தபால்)
பிற்பகல் 03.00 கண்டி முதல் கொழும்பு கோட்டை வரை
பிற்பகல் 03.25 கண்டி முதல் கொழும்பு கோட்டை வரை
மாலை 06.00 பதுளை முதல் கொழும்பு கோட்டை வரை (இரவு தபால்) மலையக ரயில் பாதையில் இருபுறமும் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் ரயில் சேவைகள் இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.