நாட்டில் பலர் அதிரடியாக கைது
நாட்டில் நச்சு போதைப்பொருள் பரவுவதைத் தடுக்க முன்னெடுக்கப்படும் தேடுதல் நடவடிக்கையின் மற்றொரு கட்டம் நேற்று (31) நடைபெற்றது.
பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் நேரடி மேற்பார்வையின் கீழ், பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் வழிகாட்டுதலின் கீழ் இந்நடவடிக்கை முன்னெடுக்கபட்டது.
இதில் இலங்கை பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படைகளைச் சேர்ந்த மொத்தம் 5,866 உறுப்பினர்கள் பங்கேற்றனர். அதன்படி, 23,321 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், 9,682 வாகனங்கள் மற்றும் 6,661 மோட்டார் சைக்கிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
இந்த விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, போதைப்பொருள் குற்றங்களுக்காக 1,107 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குற்றங்களில் நேரடியாக ஈடுபட்ட 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த நடவடிக்கைகளின் போது, 02 சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் பல்வேறு குற்றங்களுக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 423 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.