இன்றும் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஏழரை மணிநேர வெட்டு!
நாட்டில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் ஏழரை மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப் படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
பல பிரிவுகளின் கீழ் பகலில் ஐந்து மணி நேரமும், இரவில் இரண்டரை மணி நேரமும் மின்வெட்டு இருக்கும் என்று அச்சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ஐந்து மணி நேரமும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இரண்டரை மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் அனல்மின் நிலையங்களில் எரிபொருள் நெருக்கடி காரணமாக கடந்த சில நாட்களாக மின்வெட்டு நிலவி வந்த நிலையில், இம்மாதம் 2ஆம் திகதி முதல் 7.30 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் , எதிர்வரும் 5 நாட்களில் தடையின்றி மின்சாரம் வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.