மீண்டும் ஆரம்பமான ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள்
தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் அனைத்து பொதுச் சேவைகளும் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என பதில் ஆணையாளர் நாயகம் எம்.எஸ்.பி சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.
கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.

இந்தநிலையில், இடைநிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் ஒருநாள் சேவை, ஏனைய அனைத்துப் பொதுச் சேவைகள் இன்று முற்பகல் 11.00 மணி முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளது.
இன்றைய தினம் முதல் தங்களது அடையாள அட்டைத் தேவைகளுக்காக திணைக்களத்தை அணுக முடியும் எனவும் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகம் எம்.எஸ்.பி சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.