சம்பிக்க CID மீது விடுத்துள்ள கடுமையான குற்றச்சாட்டு!
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தமது வாட்ஸ்அப் (WhatsApp) அழைப்புக்களை பதிவு செய்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka) குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று (21) வியாழக்கிழமை நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உரையாற்றும் போதே சம்பிக்க ரணவக்க இதை தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID) ஏதோ ஓர் தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்தி தமது வாட்ஸ்அப் அழைப்புக்களை ஒட்டுக் கேட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நீதிமன்றம் உத்தரவு வழங்கினால் மத்திரமே தொலைபேசி உரையாடல்களை விசாரணை செய்ய முடியும். இருப்பினும் சமீபத்தில் தாம் வாட்ஸ்அப்பில் பேசிய உரையாடல்கள் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தன்னிடம் விசாரணை நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தபோது செய்யப்பட்ட பரிவர்த்தனைகள் குறித்து கடந்த மாதம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நடத்தப்பட்ட விசாரணையில் அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அவரது தொலைபேசி அழைப்புகள் கண்காணிக்கப்பட்டமை தெரியவந்தது என்று சம்பிக்க குறிப்பிட்டார்.