தென்னிலங்கையில் பெண்ணுடன் உல்லாசத்தில் இருந்த பொலிஸ் அதிகாரிக்கு அதிர்ச்சி
களுத்துறையில் சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் ஏனைய சோதனைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ் நிலையத்தில் பதிவுகளை மேற்கொண்டுவிட்டு, பெண்ணொருவருடன் விடுதியில் தங்கியிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
வெலிபென்ன பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வெலிபென்ன பொலிஸ் பொறுப்பதிகாரி, இன்ஸ்பெக்டர் எம்.கே. அனுரஜித்தின் உத்தரவின் பேரில், மேலும் மூன்று அதிகாரிகளுடன் இணைந்து சோதன நடவடிக்கைகளுக்காக வெளியேறுவதாக பொலிஸ் புத்தகத்தில் பதிவிட்டுவிட்டு அவர் பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறியுள்ளார்.
சோதனை நடவடிக்கை
இது தொடர்பில் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இதன் போது, குறித்த சார்ஜன்ட் மத்துகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அகலவத்தை வீதியிலுள்ள விடுதி ஒன்றில் பெண்ணொருவருடன் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கடமை நேரத்தில் ஒழுக்கமற்ற மற்றும் மோசடியான செயல் காரணமாக, குறித்த பொலிஸ் அதிகாரி உடனடியாகப் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.