தமிழர்களின் பிரச்சினைக்கு தனி ஈழமே தீர்வாக அமையும்-மருத்துவர் ராமதாஸ்
ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு தனித் தமிழீழமே தீர்வாக அமையும் என தமிழகத்தின் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனம் மருத்துவர் எஸ்.ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை கூறியுள்ளார். தமிழர்களுக்கென ஒரு தனி நாடாக தமிழீழம் அமைக்கும் முயற்சியில் இன்னுயிர் ஈந்த ஈழப் போராளிகளின் தியாகத்தை போன்று வகையில் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த நாளில் ஈழ விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த போராளிகளுக்கு வீர வணக்கம் செலுத்துவோம். இலங்கையின் களச்சூழல் மாறியிருக்கலாம். ஆனால் தனித் தமிழீழத்திற்கான தேவை அப்பேடியே இருக்கின்றது.
தமிழீழமே இந்தியாவின் பாதுகாப்பு வலுசேர்க்கும்
அதுவே இலங்கையின் இனச்சிக்கலுக்கான தீர்வும்கூட. இந்திய பெருங்கடல் பகுதியில் மாறி வரும் சூழலும், அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கமும் தமிழீழம் குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றி அமைப்பதற்கான காரணிகளாக உருவெடுத்து வருகின்றன.
தனித் தமிழீழம் அமைக்கப்படுவ இந்தியாவின் பாதுகாப்புக்கு வலுசேர்க்கும்.
உலகமெங்கும் உள்ள ஈழத்தமிழர்கள் மத்தியில் ஐ.நா மூலம் பொது வாக்கெடுப்பை நடத்தி, அதனடிப்படையில் தமிழீழத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர் ராமதாஸ் மேலும் தெரிவித்துள்ளார்.