இலங்கை குரங்குகள் சீனாவுக்கு அனுப்படுவது மனிதாபிமானமற்றது!
இலங்கையிலிருந்து அனுப்பப்படும் குரங்குகள் சீனாவின் ஆய்வுகூடங்களிற்கே செல்லப்போகின்றன என்றும், அங்கு அவை அங்கு சித்திரவதை செய்ய்படும் என முன்னாள் அமைச்சர் நவீன் திசநாயக்க கவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கை குரங்குகள் சீனாவுக்கு அனுப்பப்படுவது குறித்து நவீன் திசநாயக்க தெரிவிக்கையில்,
குரங்கள் சித்திரவதை செய்யப்படலாம்
வனவிலங்கு விவகாரங்களிற்கான முன்னாள் அமைச்சர் என்ற அடிப்படையில் நான் இலங்கையிலிருந்து குரங்குகளை அனுப்புவதை நான் முழுமையாக எதிர்க்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இது அருவருப்பான செயல். இலங்கையின் விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் சட்டத்திற்கு எதிரானது என்பதால் குரங்களை ஏற்றுமதி செய்வது குறித்து சிந்திக்க கூடாது எனவும் அவர் கூறினார்.
அதோடு இலங்கையில் பாதுகாக்கப்படும் அருகிவரும் உயிரினங்களை பெருமளவில் வெளிநாடுகளிற்கு ஏற்றுமதி செய்யக்கூடாது என தெரிவித்த நவீன்திசநாயக்க, மிருகக்காட்சி சாலைகளிற்கு இடையிலான பரிவத்தனை அடிப்படையிலேயே இவற்றை அனுப்பவேண்டும்.
குரங்கள் ஆய்வுகூடங்களை சென்றடையலாம் சித்திரவதை செய்யப்படலாம் என்பதை நன்குஅறிந்துள்ள போதிலும் அவற்றை ஏற்றுமதி செய்வது மனிதாபிமானமற்ற நடவடிக்கை எனவும் நவீன்திசநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் குரங்குகள் தங்களின் இயல்பான வாழ்விடத்தில் முழுமையான வாழ்வை வாழ்வதற்கு அவற்றிற்கு உரிமையுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் நவீன் திசநாயக்க கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.