நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதனின் தாயார் காலமானார்
Parliament of Sri Lanka
Selvam Adaikalanathan
Death
By Sulokshi
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதனின் தாயார் அமிர்தலிங்கம் செபமாலை தனது 84 ஆவது வயதில் நேற்றையதினம் திங்கட்கிழமை (5) காலமானார்.
அவரது பூதவுடல் மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அன்னாரது பூதவுடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக பல்வேறு தரப்பினரும், அரசியல் பிரதிநிதிகளும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தோட்டவெளி ஜோசப் வாஸ் ஆலயத்தில் நாளை புதன்கிழமை (7) காலை இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு விடத்தல்தீவு பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US