தவெக தலைவர் விஜய் திருச்செந்தூர் விஜயம்; பின்னனியில் ஜோதிடர்!
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் சமீபத்தில் முடிந்த நிலையில் விஜய் திருச்செந்தூருக்கு சென்று முருகனை தரிசனம் செய்திருப்பது பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், ஜோதிடர் ஆலோசனையின் பேரில் விஜய் திருச்செந்தூர் முருகனை தரிசிக்க சென்ற தாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பொதுவாகவே அரசியல்வாதிகள் வெற்றி கிடைக்க வேண்டுமென கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்தவகையில் விஜய் திருச்செந்தூருக்கு சென்றிருக்கிறார்.

அதிகாலை மூன்று 3 மணியிலிருந்து 5 மணி வரை விஜய் ,திருச்செந்தூர் கோவிலில் இருந்ததாக சொல்லப்படுகிறது. பட்டு வேட்டி சட்டையில் வந்த விஜய் அதன் பின் வெரும் வேஷ்டி, துண்டு மட்டும் அணிந்து கோயிலுக்குள்ளே சென்றார்.
அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டதோடு வெற்றி வேலும் பரிசாக கொடுக்கப்பட்டது அதன் பின் திருச்செந்தூர் கடற்கரைக்கு சென்று சில நேரம் விடுபட்டார்.
இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் பயனாகி வருகிறது.. இந்நிலையில், விஜயின் ஜோதிடர் ரத்தன் பண்டிட் வெற்றிவேல் ஆலோசனைப்படியே விஜய் திருச்செந்தூர் சென்று சாமி தரிசனம் செய்ததாக தகவல் பரவி வருகின்றது.