காலிமுகத்திடல் போராட்டம்...குழந்தைகளை விற்று உண்ணும் குழு - கீதா குமாரசிங்க
ஜனாதிபதி பதவி விலகும் நேரம் வரும்போது அவர் பதவி விலகுவார். எனவே, கோட்டா கோ ஹோம் என்று கூறுவதை நிறுத்துங்கள் என கலாசார மற்றும் கலை இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிறகு கோ ஹோம் என்று சொல்வது சரியா?.
மேலும் சிறிமாவோ பண்டாரநாயக்கா, பிரேமதாச, ஜே.ஆர்.ஜயவர்தன வீட்டுக்கு செல்லுமாறு கூறியபோது அவர்கள் சென்றுவிட்டார்களா என்று கேட்டார்.
இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தங்கள் மன அழுத்தத்தைப் போக்க காலிமுகத்திடலுக்கு செல்வது குறித்து தான் கவலைப்படுவதாகவும், மேலும் இதன் பின்னணியில் குழந்தைகளை விற்கும் குழுக்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.