மாணவர்களை குறி வைத்து மதன மோதக விற்பனை; சிக்கிய இளைஞன்
அநுராதபுரம் - ஹொரவ்பொத்தான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மதன மோதக போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் ஹொரவ்பொத்தான பொலிஸாரால் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளார்.
பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கமைய ஹொரவ்பொத்தான பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் லேவாசபிரிவெவ பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் என்பதுடன், சந்தேக நபரிடம் இருந்து 2,975 மதன மோதக போதை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
ஹொரவ்பொத்தான பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர், யுவதிகளை இலக்கு வைத்து இந்த மதன மோதன போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரவ்பொத்தான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.