அதிக விலைக்கு ஆப்பிள் விற்பனை; உலகில் இரண்டாவது இடத்தைப் பிடித்த இலங்கை!
உலகில் ஆப்பிள் பழம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதனை உலகின் வாழ்க்கைச் செலவு தொடர்பான மிகப்பெரிய தரவுத்தளமான நம்பியோவை (Numbeo) மேற்கோள்காட்டி பார்வையாளர் குறியீடு (The Spectator Index) எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
ஆப்பிள்
மத்திய ஆசியாவில்தான் ஆப்பிள் முதலில் பயிர் செய்யப்பட்டது. தற்போது, ஆப்பிள் உலகின் எல்லாவிதமான குளிர்ப் பகுதிகளிலும் வளர்க்கப்படுகிறது.
ஆப்பிளின் அறிவியல் பெயர் Malus sp என்பதாகும். ஆப்பிள் மற்ற பழங்களைப் போலப் பெரும்பாலும் சமைக்கப்படாமலேயே சாப்பிடப்பட்டாலும், அது பல பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
ஆப்பிளைக் கொண்டு பழரசங்களும், சிடர் என்ற பானமும் தயாரிக்கப்படுகின்றன. அத்துடன் உடலைப் பாதுகாக்கும் பழங்களில் ஆப்பிள் முதலிடம் வகிக்கிறது.
மேல்தட்டு மக்கள் உண்ணும் பழங்களில் ஆப்பிள் இன்றியமையாததாகும். ஆப்பிளில் இரும்புச்சத்து பாஸ்பரஸ் உப்பு அதிகமாக இருக்கிறது.
தினமும் பாலுடன் ஒரு ஆப்பிளும் எடுத்துக் கொண்டால் ரத்தசோகை நீக்கி உடலை பாதுகாக்கும்.
அதுமட்டுமல்லாது தினசரி ஒரு ஆப்பிள் உண்பவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என சமிபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன