தண்ணீர் கலந்து மதுபான போத்தல் விற்பனை; கடைக்கு சீல்!
ஹட்டன், அகரபத்தனை பகுதியில் தண்ணீர் கலந்த மதுபான போத்தல் விற்பனை செய்த மதுபான விற்பனை நிலையமொன்றுக்கு கலால் திணைக்கள அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
அகரபத்தனை பகுதியில் உள்ள மதுபான விற்பனை நிலையமொன்று தண்ணீர் கலந்த மதுபான போத்தல்களை விற்பனை செய்வதாக கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
தண்ணீர் கலந்த மதுபான போத்தல்
இதனையடுத்து மத்திய மாகாண கலால் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், மதுபான விற்பனை நிலையத்தில் இருந்து, தண்ணீர் கலந்த 750 மில்லி லீற்றர் நிறையுடைய 51 மதுபான போத்தல்கள், 375 மில்லி லீற்றர் நிறையுடைய 48 மதுபான போத்தல்கள் மற்றும் 180 மில்லி லீற்றர் நிறையுடைய 7 மதுபான போத்தல்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து விசாரணைகள் முடிவடையும் வரை குறித்த மதுபான விற்பனை நிலையம் கலால் திணைக்கள அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது.