59,000 லிற்றர் எரிபொருள் கைப்பற்றல்...137 பேர் கைது
சட்டரீதியான அனுமதியின்றி அதிக விலைக்கு எரிபொருள் விற்ற 137 பேர் நாடளாவிய ரீதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 429 சுற்றி வளைப்புகளில் 27,000 லிற்றர் பெற்றோல், 22,000 லிற்றர் டீசல் மற்றும் 10,000 லிற்றர் மண்ணெண்ணெய் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
எரிப்பொருள் நிரப்பு நிலையங்கள் வாயிலக கொள்வனவு செய்து அதிக விலைக்கு விற்பனை செய்த பின்னர் சட்ட விரோதமான முறையில் எரிபொருளை பதுக்கி வைதிருப்பதாக கிடைத்த தகவலின்படி சோதனைகள் நடத்தப்பட்டன.
அதன்போது 118,119 அல்லது 1997 என்ற இலக்கத்தின் வாயிலாக சட்டவிரோத எரிபொருள் தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு பொதுமக்களிடம் பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் எரிபொருளில் பல்வேறு பொருட்கள் கலக்கபடுவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலாதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். அதுமட்டுமின்றி சட்டத்திற்குப் புறம்பாக எரிபொருளை மக்கள் சேமித்து வைப்பதைப் மக்கள் தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளார் வலியுறுத்தினார்.