3 வாரங்களின் பின் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள சீதா!
வனவிலங்கு அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டிற்கிலக்காகி காயமடைந்த பெண் யானையான 'சீதா' கடந்த (18.10.2023) பிற்பகல் லொறியில் மஹரகமவிலுள்ள தனது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக பேராதனை பல்கலைக்கழக கால்நடை மருத்துவ மற்றும் விலங்கு விஞ்ஞான பீட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார்.
மூன்று வாரங்களாக தூக்கமின்மையால், யானையின் வயிற்றுப் பகுதி வீங்கியிருக்கிறது.
எனவே குறித்த அபாயத்தைக் கருத்தில் கொண்டு, பராமரிப்பாளர் அதை மஹரகமவில் உள்ள அதன் உரிமையாளரின் வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தார்," என பேராசிரியர் அசோக தங்கொல்ல கூறினார்.
சம்பவத்திற்குப் பிறகு ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் போதுமான உறக்கம் இன்மையால் யானையின் வயிற்றுப் பகுதி வீங்கியுள்ளது. வயிற்றுப் பகுதி தண்ணீரால் நிரம்பியுள்ளது, மேலும் யானையை மஹரகமவுக்கு அழைத்துச் சென்ற பிறகு தண்ணீரை அகற்ற வேண்டும்.
”யானைக்கு நீதி கிடைக்காவிட்டால் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவேன்” என யானையின் உரிமையாளர் எஸ்.எம்.ரொஷான் தெரிவித்துள்ளார்.
பெண் யானைக்கு பல ஸ்கானிங் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, யானையின் இடது காலில் உள்ள பல றப்பர் குண்டு பாகங்கள் அகற்றப்பட்டன.
மஹியங்கனை ரஜமஹா விகாரையின் வருடாந்த பெரஹர ஊர்வலத்தின் பின்னர் வனஜீவராசிகள் அதிகாரியொருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த (30.10.2023) ஆம் திகதி சீதா காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.