பாதுகாப்பு முக்கியம்! பிம்ஸ்டெக் மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்!
உக்ரைனில் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக் கடல் பிராந்திய பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) வலியுறுத்தியுள்ளார்.
பிம்ஸ்டெக் அமைப்பின் 5-வது உச்சிமாநாடு அந்த அமைப்புக்கு தற்போது தலைமைப் பொறுப்பு வகிக்கும் இலங்கை தலைமையில் இன்று புதன்கிழமை (30-03-2022) நடைபெற்றது.
இந்த அமைப்பில் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியான்மர், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் உறுப்பினராக உள்ள நிலையில், மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக கலந்து கொண்டார்.
இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில், 3 பிம்ஸ்டெக் ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
குற்ற விவகாரங்களில் பரஸ்பர சட்ட உதவிக்கான பிம்ஸ்டெக் உடன்படிக்கை, நாட்டின் பயிற்சித் துறையில் பரஸ்பர ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் பிம்ஸ்டெக் தொழில்நுட்ப மாற்ற வசதிக்கான அமைப்பு உள்ளிட்டவை ஒப்பந்தங்கள் கைழுத்தாகின.
பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி, பிம்ஸ்டெக் அமைப்பின் உறுப்பு நாடுகளிடையே மேம்பட்ட மண்டல இணைப்பு வசதிகள், ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார்.
இது தொடர்பான பல்வேறு ஆலோசனைகளையும் அவர் வழங்கி்னார். வங்கக் கடல் பிராந்தியத்தை, பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளிடையேயான இணைப்பு, வளம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுக்கான ஒரு பாலமாக மாற்ற சக தலைவர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும், அவர் கேட்டுக் கொண்டார்.
கொரோனா நெருக்கடியின் வீழ்ச்சி மற்றும் ஐரோப்பாவின் நிலைமை உள்ளிட்ட சவாலான உலகளாவிய சூழ்நிலையால் வங்கக் கடல் பகுதி பாதிக்கப்படவில்லை என்ற பிரதமர், இந்த சவால்களை எதிர்கொள்ள பிம்ஸ்டெக் இன்னும் தீவிரமான பிராந்திய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.
பொருளாதாரம் மற்றும் நம் மக்கள் இன்னும் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில வாரங்களாக ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் சர்வதேச அமைதியின் ஸ்திரத்தன்மை குறித்து கேள்விக்குறி எழுந்துள்ளது,
நமது பிராந்திய பாதுகாப்பிற்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டியதும் கட்டாயமாகிவிட்டது" என்ற பிரதமர் மோடி , "சிறந்த ஒருங்கிணைப்பு, சிறந்த வணிகம், சிறந்த மக்கள்-மக்களுக்கு இடையேயான உறவுகளின் முக்கிய அம்சமாகும்," என்று அவர் பேசினார்.