சர்சையை ஏற்படுத்திய அமைச்சரின் பாதுகாப்பு பிரிவு
பொலிஸாரின் அனுமதியுடன் ஏற்பாடு செய்யப்பட்ட மோட்டர் வாகன பேரணியானது, நாட்டின் நிலைமையை கருத்திற்கொள்ளாமல் , எரிபொருளை வீணாக்குவதாக பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளர்.
இந்நிலையில் மோட்டார் சைக்கிள் பேரணி குறித்து தென்னிலங்கை மக்களும் தமது விசனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மோட்டார் சைக்கிள் பேரணிக்கு பாதுகாப்புக்கு சென்ற அமைச்சரின் பாதுகாப்பு பிரிவுவினர் ஆயுதங்களுடன் சென்றதாகவும், இவ்வாறுஆயுதங்களை சாலையில் கொண்டு செல்ல முடியுமா? எனவும் பொலிசார் சோம்பேறிகளாகி விட்டார்களா எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நாட்டின் பாதுகாப்பு அமைட்ச்சர் சரத் வீரசேகர ஏன் இதனை கண்டுகொள்ளவில்லை எனவும் தெரிவித்த அவர்கள் , ஒரே நாடு ஒரே சட்டம் என பேசும் ஞானசாரர் எங்கே போனார் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் நாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதனை கண்டுகொள்வதில்லையா எனவும் தென்னிலங்கையர்கள் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
இலங்கை மக்கள் திண்டாட்டம்! அரசியல் வாதியின் வைரலாகும் வீடியோ
சர்ச்சையை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் பேரணிக்கு பொலிஸார் தடை!


