தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இரகசிய திட்டம்! அம்பலப்படுத்திய நபர்
தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைப்பது தான் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதான வேலை அதை 2010 ல் இருந்து சிறப்பா செயற்படுத்தி வருவதாக Santhiralingam Sukirthan முகநூலில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் மூகநூலி பதிவிட்டது,
2010 தமிழ் மக்கள் காங்கிரஸ் வெளியேற்றம் 2015ல் சுரேஷ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) அணி ஈபிஆர்எல்எஃப் வெளியேறவேண்டும் என பல பத்திரிகயாளர் மாநாடு நடாத்தி அவர்களை வெளியேற்றி நடுத்தெருவில் விட்டார்கள்.
பின்னர் க.வி விக்கினேஸ்வரனை (C.V. Vigneswaran) தமிழ் மக்களிற்கு தலைமையேற்க வாருங்கள் அடுத்த தேசிய தலைவர் நீங்கள் என துண்டிவிட்டு அவரை கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றினார்கள். பின்னர் அவரையும் நடுத்தெருவில் விட்டார்கள்.
பின்னர் 2020 ரெலோவை இரண்டு அணியாக உடைத்தார்கள் அதில் ஒரு அணியை கூட்டமைப்பை விட்டு வெளியேற்றினார்கள்.
அதற்கு பிறகு சிறிதரன் அவர்களை கூட்டமைப்பில் இருந்து வெளியேற்ற முயற்சித்தார்கள், அதற்கு விலையாக தங்களிற்கு கிடைக்கும் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அவருக்கு வழங்குவதாக வாக்குறுதி கொடுத்திருந்தார்கள் அதனை இவர்களே ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருந்தார்கள்.
இன்று செல்வம் அடைக்கலநாதனின் (Selvam Adaikalanathan) ரெலோ அணியை கூட்டமைப்பை விட்டு வெளியேற சொல்லுகிறார்கள். அதனை விட மேலும் பல தமிழரசு முக்கிய பிரமுகர்களை அணுகி வெளியேறுமாறு கோரிக்கை விட்டுள்ளார்கள் அவர்கள் எவருமே உடன்படவில்லை.
ஆகவே இதன் மூலம் கஜேந்திரகுமார், கஜேந்திரன் அணி தங்களிற்கு வழங்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்வதை தங்களின் தலைவருக்கு உறுதிப்படுத்துகிறார்கள். இவர்கள் யாரை வெளியேற்றினாலும் வீட்டுச்சின்னத்தை மக்களின் மனதில் இருந்து அகற்ற முடியாது என்பது உண்மை.