ரணிலின் திட்டத்தை தோற்கடிக்க மஹிந்த தரப்பின் இரகசிய திட்டம்! கசிந்த தகவல்
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் சமர்பித்துள்ள 2024 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை மஹிந்த தரப்பினர் தோற்கடிக்க திட்டமிட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் 13ஆம் திகதி வரவு செலவுத் திட்டத்தின் 3 வது வாசிப்பு நடைபெறவுள்ள நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு பிரிவினருக்கும் ஜனாதிபதியின் அணியினருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியே இதற்குக் காரணம் என கூறப்படுகின்றது.
ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போதிலும், ஜனாதிபதி அந்த கொள்கைகளில் இருந்து மாறுபட்ட பயணத்தை மேற்கொண்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் வரவு செலவுத்திட்டத்தை அதிகபட்சமாக தோற்கடிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குழுவொன்று வலியுறுத்தியுள்ளது.
இதற்கமைய, எதிர்க்கட்சிகளின் துணையுடன் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.