பசில் ராஜபக்சவிற்கு எதிராக இரகசிய விசாரணை... முக்கிய அதிகாரிகளிடம் பெறப்பட்ட வாக்குமூலம்!
முன்னாள் அமைச்சரான பசில் ராஜபக்ச Basil Rajapaksa தொடர்பான விசாரணைகள் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, பசிலுடன் கடந்த காலங்களில் நெருக்கமாக செயற்பட்ட வர்த்தகத் துறையினர், உட்பட முக்கிய அதிகாரிகளிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.
பசிலின் சொத்துக்கள், சேமிப்புகள், வீடு உள்ளிட்ட சொத்துக்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் தீவிரமாக தகவல்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, சர்வதேச பிடியாணை பெறக்கூடிய வகையில் மிக விரைவில் பசிலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடுப்பதற்கான ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமீபத்தில் சட்ட மா அதிபருடனான சந்திப்பின்போது ஜனாதிபதி அநுர இவ் விடயம் தொடர்பில் முக்கியமாக கேட்டறிந்து கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.