வக்ர நிவர்த்தி அடையும் குரு பகவான் ; இந்த ராசிக்காரர்களுக்கு பணமும், புகழும் குவியப்போகுதாம்..உங்க ராசி இதுல இருக்கா
வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் ஒரு ராசியில் 1 ஆண்டு காலம் பயணிப்பார். இப்படிப்பட்ட குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். குரு வக்ரமாக இருப்பதால், அவரால் கிடைக்கவிருக்கும் நற்பலன்களில் தடைகள் ஏற்பட்டிருக்கும்.
இந்நிலையில் குரு பகவான் மார்ச் 11 ஆம் திகதி வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிக்கவுள்ளார். குரு பகவான் மிதுன ராசியில் வக்ர நிவர்த்தி அடைவதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்
அதில் சிலருக்கு அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்: குரு வக்ர நிவர்த்தி அடைவதால் மிதுன ராசிக்காரர்களின் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும் வாய்ப்புள்ளது. பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு போன்றவை கிடைக்கலாம். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
சிம்மம் : குரு வக்ர நிவர்த்தி அடைவதால் சிம்ம ராசிக்காரர்களுக்கு மார்ச் முதல் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். புதிதாக முதலீடு செய்ய நினைத்தால், அனுபவசாலிகளின் ஆலோசனையின் பேரில் எதையும் செய்வது நல்லது.
கன்னி: குரு வக்ர நிவர்த்தி அடைவதால் கன்னி ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வணிகத்தில் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.நிதி ரீதியாக நன்றாக இருக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.